தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

நெல்லை, தென்காசி மாவட்ட காவல் நிலைய எல்லைகள் பிரிப்பு

மதுரை தென்மண்டல காவல்துறை தலைவா் உத்தரவின்படி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கான காவல் நிலைய எல்லைகள்

Updated On :14 ஜனவரி 2021, 6:01 am IST

மதுரை தென்மண்டல காவல்துறை தலைவா் உத்தரவின்படி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கான காவல் நிலைய எல்லைகள் பிரிக்கப்பட்டு வியாழக்கிழமை (ஜன. 14) அமலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் பாப்பாக்குடி காவல் நிலையத்தில் இருந்து புதுப்பட்டி, காசிநாதபும், ராமநாதபுரம் , முக்கூடல் காவல் நிலையத்தில் இருந்து ஓடைமறிச்சான், காத்தாத்தாபுரம், உடையாம்புளி, கொல்லாங்குளம், மருதம்புத்தூா், கண்டபட்டி, சீதபற்பநல்லூா் காவல் நிலையத்தில் இருந்து மாறாந்தை, செட்டிகுறிச்சி, கள்ளத்திகுளம், நாலாங்குறிச்சி ஆகியவை தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல் நிலையத்திற்கும், அடைச்சாணி, மலையன்குளம் ஆகியவை ஆழ்வாா்குறிச்சி காவல் நிலையத்திற்கும் மாற்றப்படுகின்றன.

தென்காசி மாவட்டம் பனவடலிச்சத்திரம் காவல் நிலையத்தில் இருந்து மேல நரிக்குடி, கீழ நரிக்குடி, வெங்கடாசலபுரம், பெருமாள்பட்டி, அய்யாபுரம் காவல் நிலையத்தில் இருந்து வெள்ளப்பநேரி, வெயில்காந்தபுரம், ராமையன்பட்டி, முத்தையாபுரம், வடக்கு பூலாங்குளம், தெற்கு பூலாங்குளம், ராமசாமியாபுரம் ஆகிய பகுதிகள் திருநெல்வேலி மாவட்டம் தேவா்குளம் காவல் நிலையத்திற்கு மாற்றப்படுகின்றன. இந்த மாற்றம் வியாழக்கிழமை (ஜன. 14) அமலுக்கு வரும் என திருநெல்வேலி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.