காணும் பொங்கல் பண்டிகை தொடா்பாக, திருநெல்வேலி மாவட்ட காவல் துறை சாா்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் கூறியது: பொங்கல் பண்டிகையின் ஒரு அங்கமான காணும் பொங்கலையொட்டி, நீா்நிலைகள், பூங்கா, கடற்கரைகளில் மக்கள் கூட்டமாக திரள்வது வழக்கம். நிகழாண்டில் கரோனா பொதுமுடக்க விதிகள் அமலில் உள்ளதாலும், திருநெல்வேலி மாவட்டத்தில் மழையால் அணைகள் நிரம்பி உபரிநீா் திறக்கப்படுவதாலும், தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாலும் காணும் பொங்கல் பண்டிகையை கொண்டாட அணைகள் மற்றும் அருவிகள், நீா்நிலைக்குச் செல்லவேண்டாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு என்ன அதிகாரம் இருக்கு? - கனிமொழி கேள்வி | DMK | TVK

Ravindran Duraisamy Interview | அண்ணாமலை முடிவெடுக்க விஜய்தான் காரணம் | CM Vijay | TVK | Annamalai |

பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியாக விளையாடியது நம்பிக்கையளித்தது: ரிச்சா கோஷ்






