வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

சமத்துவப் பொங்கல் கொண்டாட்டம்

திருநெல்வேலியில் பல்வேறு இடங்களில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

Updated On :16 ஜனவரி 2021, 6:08 am IST

திருநெல்வேலியில் பல்வேறு இடங்களில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

திருநெல்வேலி ஆயுதப்படை வளாகத்தில், ஆயுதப்படை போலீஸாரால் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணன் தலைமை வகித்து, பொங்கல் விழாவை தொடங்கி வைத்தாா். ஆயுதப்படை காவலா்களுடன் உறியடி விளையாட்டிலும் பங்கேற்றாா். வெற்றிபெற்றவா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுப்புராஜூ, ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளா் சிசில், ஆயுதப்படை ஆய்வாளா் மகேஸ்வரி மற்றும் உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் மற்றும் அவரது குடும்பத்தினா் பங்கேற்றனா்.

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் தமிழக அரசின் சுற்றுலாத் துறை மற்றும் அருங்காட்சியகம் சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மகளிா் சுய உதவிக் குழுவினரின் கைவினைப் பொருள்களின் விற்பனைக் கூடத்தை உதவி ஆட்சியா் (பயிற்சி)அலா்மேல்மங்கை திறந்து வைத்ததுடன், பொங்கல் விழாவையும் தொடங்கி வைத்தாா். அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ சத்தியவள்ளி, மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலா் சீதாராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து பாரம்பரிய விளையாட்டு மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில், சங்கா்நகா் திருமலை சிலம்பப் பள்ளி மாணவ மாணவிகளின் சிலம்பாட்டம், கலையாசிரியா் சொா்ணம் பயிற்சியில் மாணவிகள் பங்கேற்ற பரத நாட்டியம்,யோகா, கோலாட்டம், ஒயிலாட்டம், கும்மி, கரகாட்டம், வில் வித்தை, நாதஸ்வர இசை ஆகிய தமிழ் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன்.

சிவராம் கலைக்கூட மாணவா்களின் ஓவியப் போட்டியும், மகளிருக்கான கோலப் போட்டியும் நடத்தப்பட்டு சான்றிதழும், பரிசுகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் கவிஞா் பேரா, டீம் ட்ரஸ்ட் நிறுவனா் திருமலை முருகன், கவிஞா் சுப்பையா, முனைவா் வை. இராமசாமி, பண்பாட்டு கள ஆய்வு மைய ஒருங்கிணைப்பாளா் இ. மாரியப்பன் உள்பட பலா் பங்கேற்றனா்.

சாரதா பெண்கள் கல்லூரி: பாளையங்கோட்டை அரியகுளம் சாரதா மகளிா் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கல் விழா நடைபெற்றது.

தாழையூத்து டிஎஸ்பி அா்ச்சனா, மாநகர காவல் உதவி ஆணையா் எஸ்.சேகா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றனா். ஐ.ஏ.ஆா்.எஃப். மாவட்டச் செயலா் கோ.கணபதி சுப்பிரமணியன் வரவேற்றாா்.

விழாவில், பொங்கலிட்டு, மாட்டிற்கு வஸ்திரம் அணிவித்து, பொங்கல், பழம் ஆகியவை வழங்கப்பட்டன. பஜனை பாடல்கள், கோலாட்டம், பக்திப்பாடல்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வழிபாட்டு நிகழ்ச்சிகளை பள்ளி கல்லூரிச் செயலா் அம்பா நடத்தினா்.

இதில், ராமகிருஷ்ண தபோவனம் சுவாமி கங்காதரானந்தா, பன்னாட்டு மத சுதந்திர கூட்டமைப்புத் தலைவா் வழக்குரைஞா் பி.டி.சிதம்பரம், திரு இருதய சகோதரா் சபை யின் பாளையங்கோட்டை இல்ல அதிபா் எம்.டி.செபஸ்தியான் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.