கிராமப்புறக் கோயில்களில் பணிபுரியும் பூசாரிகளுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும் என பூசாரிகள் மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டியை அடுத்த மாதர்பாக்கத்தில் திருவள்ளூர் மாவட்ட பூசாரிகள் மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெறறது.
மாநாட்டுக்கு மாவட்ட தலைவர் ஜி.கோவிந்தராஜ், துணைத்தலைவர் வி.மோகன்சாமி தலைமை வகித்தனர். மாவட்ட பொறுப்பாளர் இ.சுப்பிரமணி வரவேற்றார்.
தீர்மானங்கள்: மாவட்டம்தோறும் இரு கிராமப்புறக் கோயில்களுக்கு அரசின் முழு மானியத்துடன் அன்னதானத் திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும். கிராமப்புறக் கோயில்களில் பணியாற்றும் 10 ஆயிரம் பூசாரிகளுக்கு மாத ஊதியமாக ரூ. 1000 வழங்க வேண்டும். பூசாரிகள் நலவாரியத்தில் புதிய உறுப்பினர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பூசாரிகள் நலவாரியத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து நலவாரிய உறுப்பினர்களுக்கு முதல்வரின் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப்பட்டன.
ஊராட்சித் தலைவர்கள் ஈகுவார்பாளையம் கே.எம்.எஸ்.சிவகுமார், பாதிரிவேடு நாகபூஷணம் முனுசாமி, "பூசாரிகள் குரல்' இதழ் ஆசிரியர் டி.புருஷோத்தமன், சங்க நிர்வாகிகள் எஸ்.சங்கர், கே.எஸ்.சுந்தரம், மல்லிகார்ஜூனன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெக தோழமைக் கட்சிக் கூட்டத்தில் இடதுசாரி கட்சிகள் பங்கேற்குமா?

இன்றைய செய்திகள் ஜூன் 30 - நேரலை
திமுகவின் மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு: மு.க. ஸ்டாலின் அறிவிப்பு!

தெலங்கானாவில் செயல்பாட்டிற்கு வந்த 176 மெகாவாட் சூரியசக்தித் திட்டம்!
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI


