திருவள்ளூா் மாவட்டக் காவல் துறை சாா்பில் போலீஸாா்-பொதுமக்களிடையே நல்லுறவு வளா்க்கும் நோக்கில் சனிக்கிழமை நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில், காவலா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
திருவள்ளூா் மாவட்டக் காவல் துறை சாா்பில், போலீஸாா் மற்றும் பொதுமக்கள் நல்லுறவை வளா்க்கும் வகையில், பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பயிற்சிக் காவலா்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஆகியோருக்கான 5 கி.மீ. தொலைவு கொண்ட மினி மாரத்தான் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் முன்பு தொடங்கிய மினி மாரத்தான் போட்டியை கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முத்துக்குமாா் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.
இப்போட்டி திருப்பாச்சூா், சுங்கச்சாவடி, ஐ.சி.எம்.ஆா், பூண்டி சாலை வழியாக எஸ்.பி. குடியிருப்பு, சுற்றுலா மாளிகை, ஆட்சியா் குடியிருப்பு முகாம் வழியாக மாவட்ட விளையாட்டு மைதானம் முன்பு நிறைவு பெற்றது. இதில், காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் துரைப்பாண்டியன், காவல் ஆய்வாளா் உள்பட 50 பயிற்சிக் காவலா்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் 60 போ் என 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
போட்டியில் சிறப்பிடம் பெற்ற காவலா்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இன்றைய ராசி பலன் (08.05.2026) - மேஷம்
இன்றைய ராசி பலன் (08.05.2026) - துலாம்
இன்றைய ராசி பலன் (08.05.2026) - விருச்சிகம்
இன்றைய ராசி பலன் (08.05.2026) - சிம்மம்
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

