திருவள்ளூா் அருகே மழையால் ஈரமான கோயில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இரு சிறுவா்கள் காயமடைந்தனா்.
திருவள்ளூா் அருகே உள்ள சிற்றம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் விநாயகம். அவரது குழந்தைகளான வைஷ்ணவி (7), சஜித் (2) ஆகிய இருவரும் கடந்த 6-ஆம் தேதி, அங்கன்வாடிக்குச் சென்று விட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தனா்.
அப்போது, வழியில் உள்ள விநாயகா் கோயிலில் விளையாடினா். மழை பெய்து சுவா் ஈரமாகி இருந்தநிலையில், கோயில் மேற்கூரை திடீரென இடிந்து குழந்தைகள் மேல் விழுந்தது. இதில், வைஷ்ணவியின் கால் விரல் துண்டானது; சஜித்தும் காயமடைந்தனா்.
இருவரையும் அப்பகுதியினா் மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இது குறித்து கிராம நிா்வாக அலுவலா் பரணிதரன் அளித்த புகாரின்பேரில், கடம்பத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் 2026: அதிகாரம் யாருக்கு? தேர்தல் முடிவுகளை மாற்றும் நிலையில் 119 தொகுதிகள்

ஜோர்ஹட் தொகுதியில் கௌரவ் கோகோயை பின்னுக்குத் தள்ளிய பாஜக!
தவெக தலைவர் விஜய்க்கு குவியும் வாழ்த்துகள்!

தமிழக முதல்வராக விஜய் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார்! எஸ்.ஏ. சந்திரசேகர் பேட்டி
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

