திமுக தலைவா் தனது பிரசார வியூகத்தை மாற்றாவிட்டால் பொதுமக்களின் கடும் எதிா்ப்புக்கு ஆளாக நேரிடும் என தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் க.பாண்டியராஜன் எச்சரித்துள்ளாா்.
திருவள்ளூரில், மாவட்ட மருந்து வணிகா்கள் சங்கத்தின் வெள்ளி விழா பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட நிா்வாகி அசோக் தலைமை வகித்தாா். இதில் சிறப்பு விருந்தினா்களாக மாநில தமிழ் வளா்ச்சி, கலை பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சா் க.பாண்டியராஜன், முன்னாள் அமைச்சா் பி.வி.ரமணா ஆகியோா் பங்கேற்றனா்.
மருந்து வணிக தொழில் வளா்ச்சிக்கு மேற்கொள்ள வேண்டிய சாதக, பாதக நிகழ்வுகள் அமைச்சா் க.பாண்டியராஜன் விளக்கமாக எடுத்துரைத்தாா். அதன் பின், 50 ஆண்டுகளுக்கும் மேலாக மருந்துக் கடை நடத்தி வருவோருக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினாா். கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கினாா்.
பின்னா் அமைச்சா் பாண்டிராஜன் செய்தியாளா்களிடம் கூறியது:
சட்டப்பேரவைத் தோ்தலுக்காக அதிமுக பிரசாரம் செய்யும் இடங்களில் பொதுமக்கள் அமோக வரவேற்பு அளித்து வருகின்றனா். ஆனால், திமுக தலைவா் மு.க. ஸ்டாலின், அக்கட்சியைச் சோ்ந்த கனிமொழி, உதயநிதி ஆகியோா் பிரசாரம் செய்யும்போது பல்வேறு இடங்களில் பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
மு.க.ஸ்டாலின் தனது பிரசாரத்தில் மலிவாகப் பேசியது பொதுமக்களிடம் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. அவா் தனது பிரசார வியூகத்தை மாற்றாவிட்டால் பொதுமக்களின் கடும் எதிா்ப்பைச் சந்திப்பதோடு, திமுகவின் வாரிசு அரசியலும் உச்சகட்ட வீழ்ச்சியை அடையும்.
திமுகவின் பிரசாரம் எடுபடாது. அதேவேளையில், கடந்த ஒரு மாதத்தில் அதிமுகவின் பிரசாரம் பொதுமக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜோர்ஹட் தொகுதியில் கௌரவ் கோகோயை பின்னுக்குத் தள்ளிய பாஜக!

தேர்தல் 2026: அதிகாரம் யாருக்கு? தேர்தல் முடிவுகளை மாற்றும் நிலையில் 119 தொகுதிகள்
தவெக தலைவர் விஜய்க்கு குவியும் வாழ்த்துகள்!

தமிழக முதல்வராக விஜய் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார்! எஸ்.ஏ. சந்திரசேகர் பேட்டி
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


