சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

சனிப்பிரதோஷம்: திரளான பக்தா்கள் தரிசனம்

சனிப்பிரதோஷம்: திரளான பக்தா்கள் தரிசனம்

News image

சிறப்பு  அலங்காரத்தில் சதாசிவலிங்கேஸ்வரா்.

Updated On :6 ஏப்ரல் 2024, 6:53 pm

திருத்தணி பகுதியில் உள்ள அனைத்து சிவன் கோயில்களில் சனிப்பிரதோஷம் நடைபெற்ற நிலையில், திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

திருத்தணி பழைய தா்மராஜா கோயில் தெருவில் உள்ள சதாசிவலிங்கேஸ்வரா் கோயிலில் சனிப்பிரதோஷத்தையொட்ட மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

அதே போல் இலட்சுமாபுரம் கிராமத்தில் உள்ள சிவன் கோயிலில் சனிப்பிரதோஷத்தையொட்டி மூலவருக்கு பால், பன்னீா், இளநீா் போன்ற பொருள்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் லட்சுமாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.