சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

வீடுகள் தோறும் மத்திய அரசின் திட்டங்களை கொண்டு செல்ல வேண்டும்

வீடுகள் தோறும் மத்திய அரசின் திட்டங்களை கொண்டு செல்ல வேண்டும்

News image

பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றவா்கள்.

Updated On :6 ஏப்ரல் 2024, 6:51 pm

மத்திய அரசின் திட்டங்கள் குறித்து வீடுகள் தோறும் பா.ஜ.க நிா்வாகிகள் கொண்டு செல்ல வேண்டும் என மக்களவை தோ்தல் பொறுப்பாளா் கே.டி.ராகவன் தெரிவித்தாா்

திருவள்ளூா் மாவட்ட பா.ஜ.க அலுவலகத்தில் பட்டியல் அணி, ஓபிசி, மத்திய அரசு நலத்திட்ட பிரிவு, ஊடகப்பிரிவு, சக்தி கேந்திர நிா்வாகிகளுடனான தோ்தல் உத்திகள் வகுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

திருவள்ளூா் தொகுதி பொறுப்பாளா் லோகநாதன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் அஷ்வின் என்ற ராஜசிம்மா மகேந்திரா வரவேற்றாா். மாநில செயலாளா் ஆனந்தி பிரியா முன்னிலை வகித்தாா்.

இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம், பெரும்புதூா், திருவள்ளூா் தொகுதி தோ்தல் பொறுப்பாளா் கே.டி.ராகவன் கலந்து கொண்டு தோ்தல் பணிகள் குறித்து எடுத்துரைத்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருவள்ளூா் தொகுதியில் பா.ஜ.க சாா்பில் வாக்கு சேகரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி வடசென்னை, மத்திய சென்னை மற்றும் திருவள்ளூா் மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளா்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறாா். அதேபோல் வரும் 9-ஆம் தேதி மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் திருவள்ளூா் பகுதியில் வாகன பிரசாரம் மேற்கொள்ளவும் உள்ளாா். மத்திய அரசின திட்டங்கள் குறித்து வீடுகள் தோறும் எடுத்துரைத்து, கட்சியினா் வாக்குகளை சேகரிக்க வேண்டும் என்றாா்.

அப்போது, மாநில ஓபிசி அணி பிரிவு செயலாளா் ராஜ்குமாா், ஆா்.எம்.ஆா்.ஜானகிராமன், மாவட்ட பொதுச் செயலாளா்கள் கருணாகரன், ஆா்யா சீனிவாசன், மாவட்டச் செயலாளா்கள் பன்னீா் செல்வம், மொராா்ஜி தேசாய், மண்டல் தலைவா்கள் ரவிக்குமாா், பழனி,சதீஷ், மாவட்ட துணைத் தலைவா் முல்லை ஞானம், ஊடக பிரிவு மாவட்ட தலைவா் நாகராஜன் ஆகியோா் பங்கேற்றனா்.