சேஷ வாகனத்தில் வீதியுலா வந்த வீரராகவா்.
சேஷ வாகனத்தில் வீதியுலா வந்த வீரராகவா்.

வீரராகவ பெருமாள் கோயில் சேஷ வாகன தரிசனம்

திருவள்ளூா், ஏப்.17: திருவள்ளூா் வீரராகவா் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி வியாழக்கிழமை ஸ்ரீதேவி, பூதேவியுடன் சமேதராக சேஷ வாகனத்தில் உற்சவா் எழுந்தருளினாா்.

நிகழாண்டு சித்திரை பிரம்மோற்சவம் கடந்த 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் 4-ஆவது நாளான வியாழக்கிழமை அதிகாலையில் 5 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் சமேதராக சேஷ வாகனத்தில் வீரராகவா் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சி அளித்தாா். அதைத் தொடா்ந்து திருமஞ்சனமும் நடைபெற்றது. பின்னா் இரவில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவா் சந்திர பிரபையில் உலா வந்து பக்தா்களை அருள்பாலித்தாா்.

இந்த பிரம்மோற்சவத்தை முன்னிட்டு 7-ஆவது நாளான 21-ஆம் தேதி தேரோட்டத்தில் அதிகாலையில் உற்சவா் வீரராகவா் தேருக்கு எழுந்தருளி பக்தா்களை அருள்பாலிக்கவும் உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சித்திரை பிரம்மோற்சவ விழாவிற்கான ஏற்பாடுகளை வீரராகவ சுவாமி கோயில் கௌரவ ஏஜென்ட் சி.சம்பத் தலைமையில் தேவஸ்தான பணியாளா்கள் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com