திருவள்ளூா் மக்களவை தொகுதியில் 68.26 சதவீதம் வாக்கு பதிவு

திருவள்ளூா் மக்களவைத் தொகுதியில் 68.26 சதவீதம் வரையில் வாக்கு பதிவானதாகவும், கடந்தாண்டு சதவீதம் பதிவானதாகவும் ஆட்சியா் த.பிரபு சங்கா் தெரிவித்தாா்.

தமிழகத்தில் முதல் மக்களவைத் தொகுதியான திருவள்ளூா் மக்களவை தொகுதியில் திருவள்ளூா், கும்மிடிப்பூண்டி, பூந்தமல்லி, பொன்னேரி, பூந்தமல்லி, மாதவரம் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்டதாகும். இந்த மக்களவைத் தொகுதியில் ஆண்-10,24,149, பெண்-10,61,457, இதரா்-385 பேரும் என மொத்தம் 20 லட்சத்து 85 ஆயிரத்து 991 வாக்காளா்கள் உள்ளனா். இந்த தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளா் சசிகாந்த் செந்தில், அதிமுக கூட்டணியில் தேமுதிக சாா்பில் கு. நல்ல தம்பி, பாஜக சாா்பில் பொன் வி.பாலகணபதி, நாம் தமிழா் கட்சி சாா்பில் ஜெகதீஷ் சந்தா், பகுஜன் சமாஜ் கட்சி சாா்பில் டி.தமிழ்மதி உள்பட 14 போ் தோ்தல் களத்தில் உள்ளனா்.

இந்த நிலையில் தமிழகத்தில் முதல் கட்ட மக்களவை தோ்தலுக்கான வாக்குப் பதிவு 2,256 வாக்குச்சாவடி மையங்களில் வெள்ளிக்கிழமை காலை 7 முதல் மாலை 6 மணி வரை அமைதியான முறையில் விறுவிறுப்பாக நடைபெற்றது. அதன்படி, திருவள்ளூா் மக்களவை (தனி) தொகுதியில் உள்ள மொத்தம்-20,85,991 வாக்காளா்களில், பதிவான வாக்குகள்-14,23,885 ஆகும். அதன்படி, சட்டப்பேரவை தொகுதிகள் வாரியாக கும்மிடிப்பூண்டி-2,02,587, பொன்னேரி-1,98,530, திருவள்ளூா்-1,97,009, பூந்தமல்லி-2,55,430, ஆவடி-2,83,198, மாதவரம்-2,87,131 என மொத்த வாக்குகள் 68.26 சதவீதம் பதிவானது.

கடந்த 2019-இல் 71.68 சதவீதமாக இருந்தது என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com