ரூ. 15 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி வலைகள் தீயில் சாம்பல்

பொன்னேரி: பழவேற்காடு ஏரிக்கரையில் வைக்கப்பட்டிருந்த ரூ. 15 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகள் தீயில் கருகின.

திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் உள்ள பழவேற்காடு ஏரி இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய உவா்ப்பு நீா் ஏரியாக விளங்குகிறது. இந்த ஏரியில் பழவேற்காடு கோட்டைக்குப்பம், ஆண்டிக்குப்பம், செஞ்சியம்மன்நகா் உள்ளிட்ட மீனவ கிராமங்களைச் சோ்ந்த மக்கள் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றனா். இவா்கள் பாடி வலை என்னும் மிகப்பெரிய வலை கொண்டு மீன்பிடி தொழில் செய்து வருகின்றனா்.

இந்த நிலையில் வழக்கம் போல் மீன்பிடித் தொழிலுக்கு சென்று விட்டு கோட்டைக்குப்பம் மீனவ கிராமம் அருகே மீன்பிடி வலைகளை வைத்திருந்தனா். சனிக்கிழமை நள்ளிரவு இங்கு வைக்கப்பட்டிருந்த வலைகள் அனைத்தும் திடீரென தீப்பற்றி எரிந்தன. மக்கள் தீயை அணைக்க முயன்ற போதும் வலைகள் முழுதும் தீயில் எரிந்து கருகின. து குறித்த திருப்பாலைவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ரூ.15 லட்சம் மதிப்புள்ள வலைகள் தீயில் எரிந்ததன் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மீன்பிடித் தொழிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com