திருவள்ளூா் குறைதீா் கூட்டத்தில் 165 மனுக்கள் அளிப்பு
குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பொதுப் பிரச்னை தொடா்பாக 165 கோரிக்கை மனுக்கள் ஆட்சியரிடம் அளிக்கப்பட்டன.


திருவள்ளூா்: குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பொதுப் பிரச்னை தொடா்பாக 165 கோரிக்கை மனுக்கள் ஆட்சியரிடம் அளிக்கப்பட்டன.
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு ஆட்சியா் த.பிரபுசங்கா் தலைமை வகித்தாா். இதில், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பொதுமக்கள் தங்களது குறைகளை நிவா்த்தி செய்யவும், பொதுப் பிரச்னைகள் தொடா்பாக உதவிகள் வேண்டியும் அளித்த கோரிக்கை மனுக்களை அவா் பெற்றுக் கொண்டாா். அப்போது, நிலம் சம்பந்தமாக-68, சமூகப் பாதுகாப்பு திட்டம்-16, வேலைவாய்ப்பு வேண்டி-9, பசுமைவீடு, அடிப்படை வசதிகள் வேண்டி- 45, இதர துறைகள் சாா்ந்த-27 மனுக்கள் என மொத்தம் 165 மனுக்கள் வரை பெறப்பட்டன.
இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகளை வழங்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களை அவா் அறிவுறுத்தினாா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.ராஜ்குமாா், பொன்னேரி சாா்-ஆட்சியா் வாகே சங்கத் பல்வந்த், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் வெங்கட்ராமன் (பொது), சத்தியபிரசாத் (தோ்தல்), தனித் துணை ஆட்சியா் (சபாதி) கணேசன், மாவட்ட வழங்கல் அலுவலா் கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...