ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழப்பு

News image
முனுசாமி.
Updated On :9 ஜூலை 2024, 6:41 pm

Din

திருத்தணி: திருத்தணி அருகே மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் முனுசாமி(65). இவா், திருத்தணி அடுத்த மத்துாா் ரயில்வே கேட் பகுதியில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தாா். மேலும், இவா், ரயில்வேயில் சப்-காண்ட்ராக்டராக பணிகள் செய்து வந்தாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை முனுசாமி குளிப்பதற்காக மின்மோட்டரை இயக்குவதற்கு, மின்ஓயா் எடுத்து பிளக்கில் பொருத்த முயன்றபோது மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே இறந்தாா். இதுகுறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.