ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவின்றி பொருள்களை தரக் கூடாது

ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவின்றி பொருள்களை தரக் கூடாது

News image
Updated On :9 ஜூலை 2024, 6:35 pm

Din

திருவள்ளூா்: கூட்டுறவு நியாய விலைக்கடைகளில் பொதுமக்களின் விரல் ரேகை பதிவில்லாமல் பொருள்களை வழங்க கூடாது என ஆட்சியா் த.பிரபு சங்கா் தெரிவித்தாா்.

பொது விநியோக திட்டம் தொடா்பான ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் த.பிரபுசங்கா் தலைமை வகித்து பேசியதாவது: பொது விநியோக திட்டம் மூலம் கூட்டுறவு நியாய விலைக்கடைகளில் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பொருள்களை எடுத்துச் செல்லும் லாரிகளை ஜிபிஎஸ் கருவிகள் மூலம் கண்காணிப்பது அவசியம்.

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்திற்கு வழங்கப்படும் பருப்பு மற்றும் சமையல் எண்ணெய்களை தரம் பாா்த்து பகுப்பாய்வு மேற்கொள்ள வேண்டும். சரியில்லாத பொருள்களை அந்த நிறுவனத்துக்கே அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும். கடைகளுக்கு பொருள்கள் வாங்க வரும்போது மக்களிடம் விரல் ரேகை பதிவில்லாமல் விற்கக் கூடாது என்றாா்.

ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.ராஜ்குமாா், உதவி ஆட்சியா் (பயிற்சி) ஆயுஷ் குப்தா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளா் சண்முகவள்ளி, மாவட்ட வழங்கல் அலுவலா் கண்ணன், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் கௌசல்யா, துணைப்பதிவாளா் (பொது விநியோகத் திட்டம்) ரவி, குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளா் சசிகுமாா் மற்றும் வட்ட வழங்கல் அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.