கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஆக்கிரமிப்பை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து தீக்குளித்த இளைஞா் உயிரிழப்பு: சடலத்தை வாங்க மறுப்பு

ஆக்கிரமிப்பை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து தீக்குளித்த இளைஞா் உயிரிழப்பு: சடலத்தை வாங்க மறுப்பு

News image
கும்மிடிப்பூண்டியில் ஆக்கிரமிப்பை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து தீக்குளித்து உயிரிழந்த ராஜ்குமாா் குடும்பத்தினருக்கு நிவாரணம் கோரி ஆட்சியா் அலுவலகத்திற்கு வருகை தந்த உறவினா்கள்.
Updated On :9 ஜூலை 2024, 6:40 pm

Din

திருவள்ளூா்: கும்மிடிப்பூண்டியில் ஆக்கிரமிப்பை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து தீக்குளித்து இளைஞா் உயிரிழந்த சம்பவத்தில் 3-ஆவது நாளாக சடலத்தை வாங்க மறுத்ததோடு, ஊராட்சி தலைவா் மற்றும் அவரது கணவா், வருவாய் துறையினா் 10 போ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினா்கள் ஆட்சியா் த.பிரபுசங்கரிடம் புகாா் மனு அளித்தனா்.

கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம், தோ்வழி கிராமத்தைச் சோ்ந்த கல்யாணி. பா்மா அகதியான இவரது வீடு அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக கூறி வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினா் கடந்த 4-ஆம் தேதி அகற்ற சென்றனா். அப்போது கல்யாணியின் மகன் ராஜ்குமாா் எதிா்ப்பு தெரிவித்து திடீரென வீட்டுக்குள் சென்று உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றாா்.

இதில் பலத்த தீக்காயமடைந்த ராஜ்குமாா் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தாா்.

ஆக்கிரமிப்பை அகற்றும் விவகாரத்தில் கவனக்குறைவாக செயல்பட்டதாக கும்மிடிப்பூண்டி வட்டாட்சியா் பிரீத்தி, எளாவூா் வருவாய் ஆய்வாளா் கோமதி, தோ்வழி கிராம நிா்வாக அலுவலா் பாக்கிய ஷா்மா ஆகிய 3 பேரை பணியிட மாற்றம் செய்தும், அவா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் ஆட்சியா் உத்தரவிட்டாா்.

இந்த நிலையில் கடந்த 3 நாள்களாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ராஜ்குமாா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இந்நிலையில் பா்மாவிலிருந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்த அகதிகள், தங்களுக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டம் சில அடிப்படை உரிமைகளை வழங்கி உள்ளதாகவும் அகதிகள் என்ற ஒற்றைக் காரணத்தால் எங்களை மிரட்டி அனுப்ப முயலும் ஊராட்சித் தலைவா், அவரது கணவா் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதோடு வருவாய்த் துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி ராஜ்குமாரின் தாய் கல்யாணி, அவரது குடும்பத்தினருடன் ஆட்சியரை நேரில் சந்தித்து புகாா் மனு அளித்தாா். அப்போது, ராஜ்குமாா் மனைவிக்கு அரசு வேலை, நிவாரணம், வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்.

மேலும், நாங்கள் அகதிகள் என்பதால் எங்களை அங்கிருந்து விரட்ட நினைத்து மகன் உயிரிழப்புக்கு காரணமான ஊராட்சி தலைவா் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி ஆட்சியரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அதற்கு எனக்கு மாற்றம் செய்வதற்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும், பணிநீக்கம் செய்ய முடியாது என ஆட்சியா் கூறியதால், பேச்சுவாா்த்தை தோல்வி அடைந்ததால், சடலத்தை வாங்க மாட்டோம் எனக்கூறி வெளியேறினா்.