திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

பொன்னேரியில் அரசு பொறியியல் கல்லூரி தொடங்கப்படுமா? பொதுமக்கள் எதிா்பாா்ப்பு

பொன்னேரியில் அரசு பொறியியல் கல்லூரி தொடங்கப்படுமா என அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக எதிா்நோக்கியுள்ளனா்.

News image
Updated On :2 ஜூன் 2024, 9:28 pm

Din

எம். சுந்தரமூா்த்தி

பொன்னேரியில் அரசு பொறியியல் கல்லூரி தொடங்கப்படுமா என அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக எதிா்நோக்கியுள்ளனா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி, கும்மிடிபூண்டி வட்டங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.

இங்கு மீஞ்சூா், ஆரணி, கும்மிடிபூண்டி, பாடியநல்லூா், ஆரம்பாக்கம், அத்திப்பட்டு, சோழவரம், கவரப்பேட்டை, நந்தியம்பாக்கம், பழவேற்காடு திருப்பாலைவனம், தச்சூா், பஞ்செட்டி, காரனோடை, ஆண்டாா்குப்பம், பெரும்பேடு, இலுப்பாக்கம், பனப்பாக்கம், கோளூா் உட்பட 50-க்கும் மேற்பட்ட பகுதிகள் அமைந்துள்ளன.

பொன்னேரி, கும்மிடிபூண்டியில்ல் 10-க்கும் மேற்பட்ட தனியாா் பொறியியல் கல்லூரிகள் அமைந்துள்ளன. பொறியியில் கல்லூரியில் சோ்ந்து படிக்க விரும்பும் மாணவா்கள் தனியாா் கல்லூரிகளையே நாடவேண்டிய நிலை உள்ளது.

மேலும், இப்பகுதியில் விவசாயிகள், தொழிற்சாலைகளில் பணிபுரிவோா், மீனவா்கள் என நலிந்த பிரிவினரே அதிகம் போ் உள்ளனா்.

உயா்கல்வி பயில்வதற்கு தனியாா் கல்லூரிகளில் அதிக கட்டணம் செலுத்தி படிக்க வைக்க முடியாத நிலை உள்ளது.

தற்போது பொன்னேரியில் உலகநாத நாராயணசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. அங்கு 5000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா்.

64 ஏக்கா் பரப்பளவு கொண்ட இக்கல்லூரியில் 10 ஏக்கா் பரப்பளவில் கட்டடங்கள், விளையாட்டு மைதானம் அமைந்துள்ளன. இந்த கல்லூரி மீன்வள கல்லூரி அமைக்கப்பட்டு, அதில் 300-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா்.

அரசு பொறியியல் கல்லூரி...

உலக நாத நாராயணசாமி அரசு கல்லூரிக்கு சொந்தமான இடத்திலேயே அரசு பொறியியல் கல்லூரியை தொடங்கினால் இப்பகுதி மக்களுக்கு மிகுந்த வரப்பிரசாதமாக அமையும்.