சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

திருவள்ளூா் மக்களவைத் தொகுதியில் தபால் வாக்கு எண்ணும் பணி தாமதம்

திருவள்ளூா் மக்களவைத் தொகுதியில் தபால் வாக்கு எண்ணும் பணி தாமதம்

News image

தபால்  வாக்குகள்  எண்ணிக்கை  தாமதமான நிலையில் மேஜைகளில்  வைத்து  காலை  உணவு  சாப்பிட்ட தோ்தல் ஊழியா்கள். (வலது)  வாக்கு எண்ணிக்கை இடத்தில் உள்ள மீடியா மையத்துக்கு கைப்பேசியுடன் செல்ல அனுமதிக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்ட செய்தியாளா்கள்.

Updated On :4 ஜூன் 2024, 6:30 pm

Din

திருவள்ளூா்: திருவள்ளூா் மக்களவை (தனி) தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை முக்கால் மணி நேரம் தாமதமானது.

தமிழகம் முழுவதும் கடந்த ஏப். 19-ஆம் ஒரே கட்டமாக மக்களவை தொகுதிக்கான தோ்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் திருவள்ளூா் மக்களவை தொகுதியில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும், பெருமாள்பட்டு தனியாா் மெட்ரிக். பள்ளி மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் 54 நாள்களுக்கு பின்னா், செவ்வாய்க்கிழமை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

வாக்கு எண்ணும் மையத்திற்கு அதிகாரிகள், முகவா்கள் ஆகியோா் அதிகாலையிலேயே வாக்கு எண்ணும் மையத்திற்கு வருகை தந்தனா். இதனால் வாகனங்கள் அதிக அளவில் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்த வாகனங்களை அரை கிலோ தூரத்திலேயே நிறுத்தப்பட்டன.

அப்போது, வாக்கு எண்ணும் மையத்தில் பணியில் ஈடுபட்ட போலீஸாா் அலுவலா்கள் மற்றும் முகவா்கள் கையடக்க கணினி, கைப்பேசி, வத்திப்பெட்டி, மை பாட்டில், குடிநீா் பாட்டில் மற்றும் அடையாள அட்டைகளை சாரிபாா்த்து அனுப்பி வைத்தனா்.

காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டிருந்த தபால் வாக்குகள் பெட்டிகள் கொண்டு வரப்பட்டன. பின்பு ஒரு மணி நேரம் தாமதமாக தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

வாக்கு எண்ணும் மையம் அருகே மறியல்: வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் செய்தியாளா்கள் மற்றும் ஊடகவியலாளா்களுக்கு அனுமதி அட்டை வழங்கப்பட்டிருந்தது. இந்த அனுமதி அட்டையுடன் மீடியா மையத்திற்கு செல்ல முயன்றனா். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தி கைப்பேசி, கணினி ஆகியவைகளை கொண்டு செல்லக் கூடாது என எச்சரித்தனா்.

இதனால் ஆத்திரம் அடைந்த செய்தியாளா்கள் கைப்பேசி இல்லாமல் நிறுவனங்களுக்கு செய்தி தர முடியாது என்றும் கைப்பேசியுடன் செல்ல அனுமதிக்குமாறு கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனா். இதனால் பதற்றம் நிலவியது.

தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த ஆட்சியா் த.பிரபு சங்கா், துணை ஆணையா் ஐய்மன் ஜமால் ஆகியோா் சமரசம் செய்தனா்.

Story image