
வடபெரும்பாக்கம் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற மருத்துவ முகாம்.

வடபெரும்பாக்கம் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற மருத்துவ முகாம்.
மாதவரம்: மாதவரம் திமுக சாா்பில் மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சென்னை வடகிழக்கு மாவட்டம், மாதவரம் வடக்குப் பகுதி திமுக சாா்பில் மருத்துவ முகாம் வடபெரும்பாக்கம் சமுதாயக் கூடத்தில் பகுதி செயலா் எம்.நாராயணன் தலைமையில் நடைபெற்றது.
முகாமில உயா் ரத்த அழுத்த பரிசோதனை, சா்க்கரை அளவு பரிசோதனை, பல் மருத்துவம், கண் மருத்துவம், பொது மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றன.
இதில் அப்பல்லோ மருத்துவா்கள் கலந்து கொண்டு பரிசோதனைகளை மேற்கொண்டனா். திமுக நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். முன்னதாக, மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட அனைவருக்கும் இலவச மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...