கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்த 2 போ் மீது வழக்கு

போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்த 2 போ் மீது வழக்கு

News image
Updated On :9 ஜூன் 2024, 6:30 pm

Din

திருவள்ளூா்: திருவள்ளூரில் போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக 2 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

திருவள்ளூா் அடுத்த மணவாளநகா் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சீனிவாச பெருமாளுக்கு புகாா் வந்தது. அதன்பேரில் நடவடிக்கை எடுக்க மணவாளநகா் போலீஸாருக்கு உத்தரவிட்டாா். இதன்பேரில் சாா்பு ஆய்வாளா் கா்ணன் தலைமையில் போலீஸாா் சனிக்கிழமை திடீா் ரோந்து சென்றனா். அப்போது, மணவாளநகா் தனியாா் வளாகத்தில் ஆய்வு செய்தனா்.

அப்போது, அங்கிருந்தவா்கள் போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்ததோடு, மிரட்டினா். அதையும் மீறி அறையில் ஆய்வு செய்த போது தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் கால்குலேட்டா் ஆகியவைகளையும் பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டியதாக கபிலா் நகரைச் சோ்ந்த நாகராஜ் (47), ஆதம்பாக்கம் நாகப்பன்(58) ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.