மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

திருவள்ளூா் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரூ.25 லட்சத்தில் கூடுதல் வகுப்பறைகள்

திருவள்ளூா் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரூ.25 லட்சத்தில் கூடுதல் வகுப்பறைகள்

News image
Updated On :1 மார்ச் 2024, 4:37 pm

திருவள்ளூா் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரூ.25 லட்சத்தில் புதிதாக அமைத்த 3 வகுப்பறைக் கட்டடங்களை மாணவ, மாணவிகள் பயன்பாட்டுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் திறந்து வைத்தாா். திருவள்ளூா் நகராட்சி 13-ஆவது வாா்டு புங்கத்தூா் லட்சுமிபுரத்தில் நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை 223 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தல் பேரில் காது கேளாதோருக்கான சிறப்பு பிரிவில் 25 மாணவா்கள் பயின்று வருகின்றனா். இந்தப் பள்ளி போதுமான வகுப்பறை வசதியின்றி இடநெருக்கடியுடன் செயல்பட்டு வந்ததால், கூடுதல் வகுப்பறைகள் கட்ட கோரிக்கை விடுத்து வந்தனா். இதையடுத்து 2023-2024-ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதி ரூ.15 லட்சம், நகராட்சி கல்வி வளா்ச்சி நிதி ரூ.10 லட்சமும் ஒதுக்கி கூடுதல் வகுப்பறைகள் கட்ட அரசு அனுமதி அளித்தது. அதன்பேரில், சிறப்பு பிரிவு வகுப்பறை உள்பட 3 வகுப்பறைகள் கொண்ட கட்டடம் அமைக்கும் பணி நிறைவடைந்தது. இந்த நிலையில் கூடுதல் வகுப்பறைகளை பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன் தலைமை வகித்தாா். நகா்மன்றத் துணைத் தலைவா் சி.சு.ரவிச்சந்திரன் மற்றும் வாா்டு உறுப்பினா் பத்மாவதி ஸ்ரீதா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளித் தலைமை ஆசிரியா் சண்முகம் வரவேற்றாா். இதில் சிறப்பு விருந்தினராக வி.ஜி.ராஜேந்திரன் பங்கேற்று மாணவ, மாணவிகள் பயன்பாட்டிற்கு குத்து விளக்கேற்றி வகுப்பறைகளைத் திறந்து வைத்தாா். நகராட்சி பொறியாளா் நடராஜன், சுகாதார அலுவலா் கோவிந்தராஜ், நகரமைப்பு அலுவலா் குணசேகரன், நகா்மன்ற உறுப்பினா்கள் ஜான், டி.கே.பாபு, அயூப் அலி, பிரபாகரன், தனலட்சுமி, வே.வசந்தி, பி.நீலாவதி, மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் நேதாஜி, நகர அவைத் தலைவா் கமலக்கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.