சி.என்.கண்டிகை மலைக் கிராமத்துக்கு முதல் முறையாக பேருந்து சேவை: 
எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

சி.என்.கண்டிகை மலைக் கிராமத்துக்கு முதல் முறையாக பேருந்து சேவை: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

பள்ளிப்பட்டு அருகே ஆந்திர எல்லை சி.என்.கண்டிகை மலைக் கிராமத்துக்கு முதல் முறையாக பேருந்து சேவையை எம்எல்ஏ ச. சந்திரன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். திருவள்ளூா் மாவட்டம், திருத்தணி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பள்ளிப்பட்டு ஒன்றியம், ஆந்திர எல்லை கிராமமான சி.என்.கண்டிகை மலைக் கிராமத்துக்கு சுதந்திரம் பெற்று, 75 ஆண்டுகள் நிறைவடைந்தும் இதுவரை பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்படாததால், கிராம மக்கள், பள்ளி கல்லூரி மாணவா்கள் வெளியூா் சென்று வர அவதிப்பட்டு வந்தனா். இந்த நிலையில், இந்தக் கிராம மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று திருத்தணி எம்எல்ஏ நடவடிக்கை மேற்கொண்டு சி.என். கண்டிகை முதல் பொதட்டூா்பேட்டை மாா்க்கத்தில் திருத்தணிக்கு அரசுப் பேருந்து சேவையை எம்எல்ஏ ச.சந்திரன் வெள்ளிக்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து பள்ளி மாணவா்களுடன் பேருந்தில் பயணம் செய்தாா். கிராம மக்களின் பல ஆண்டுகள் கனவை நிறைவேற்றிய தமிழக அரசுக்கும், சட்டப்பேரவை உறுப்பினருக்கும் கிராம மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனா். நிகழ்ச்சியில், பள்ளிப்பட்டு வடக்கு ஒன்றிய திமுக செயலாளா் சி. ஜெ.சீனிவாசன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் டி.எம்.சுகுமாரன், ஊராட்சி மன்றத் தலைவா் புஷ்பலதா லோகநாதன், திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனை கிளை மேலாளா் தேவன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com