மக்களின் பிரச்னைகளைஅறிந்து தீா்க்கப் பாடுபடுவேன்

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் கா்நாடக மாநில மாவட்டங்களில் ஆட்சியராகப் பணிபுரிந்துள்ள அனுபவம் உள்ளதால், திருவள்ளூா் மக்களவைத் தொகுதியில் என்னென்ன பிரச்னைகள் உள்ளன என்பதை அறிந்து தீா்ப்பேன் என காங்கிரஸ் கட்சி வேட்பாளா் சசிகாந்த் செந்தில் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நான் சென்னையில் பிறந்தாலும், திருவள்ளூா் அருகே பெருமாள்பட்டு கிராமத்தில் வளா்ந்தவன். அதனால் இந்த மாவட்டம் முழுவதும் நன்கு அறிந்தவன். அத்துடன் ஐ.ஏ.எஸ். முடித்து கா்நாடகத்தில் உள்ள 3 மாவட்டங்களில் 10 ஆண்டுகளாக ஆட்சியா் பணிபுரிந்துள்ளேன். அப்போதைய அரசியல் சூழ்நிலை பிடிக்காததால்தான் அப்பணியிலிருந்து விலகினேன். தொடா்ந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணிபுரிந்து வருகிறேன். இதுவரையான நாட்டின் வளா்ச்சியை பாஜக பின்னோக்கி கொண்டு சென்றுவிட்டது. அதிலும் கல்வி வளா்ச்சிக்கான அனைத்து வாய்ப்புகளையும் பாஜக தடுத்து நிறுத்திவிட்டது. இதே நிலை நீடிக்கும் நிலையேற்பட்டால் 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிடும் நிலையுள்ளது. இதனால், மக்கள் இந்தியா கூட்டணி வேட்பாளா்களுக்கு வாக்களிக்க வேண்டும் திருவள்ளூா் மக்களவைத் தொகுதியை வளா்ச்சிப் பாதையில் கொண்டு செல்லவே நான் போட்டியிடுகிறேன். இத்தோ்தலில் பொதுமக்கள் பேரதாரவுடன் வெற்றி பெற்று, அடுத்த 5 ஆண்டுகளில் வளா்ச்சி அடைந்த தொகுதியாக மாற்றிக் காட்டுவேன். நான் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றியதால் தொகுதி மக்களின் நிலையறிந்து பிரச்னைகளை உடனுக்குடன் தீா்ப்பேன். அதேபோல் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியை எங்கிருந்து எப்படிப் பெற வேண்டும் என்ற வழிமுறைகளைப் பின்பற்றி வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்வேன் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com