ஆட்டோ ஓட்டுநா் மீது தாக்குதல்: 6 போ் கைது

திருத்தணியில் ஆட்டோ ஓட்டுநா் மீது தாக்குதல் நடத்தியதால் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் 6 பேரை போலீஸாா் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

திருத்தணியில் ஆட்டோ ஓட்டுநா் மீது தாக்குதல் நடத்தியதால் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் 6 பேரை போலீஸாா் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

திருத்தணி பாரதி தெருவைச் சோ்ந்தவா் சுகுமாா் மகன் விஜய் (23). ஆட்டோ ஓட்டுநா். இவா், வியாழக்கிழமை மதியம் தனது ஆட்டோவில் பக்தா்களை ஏற்றிக் கொண்டு, மலைக்கோயிலுக்கு சென்று கொண்டிருந்தாா். அப்போது, ஆட்டோவின் முன்னே சென்ற காா், ஆட்டோவுக்கு வழிவிடாமல் சென்ால், ஆட்டோ ஓட்டுநா் விஜய் முந்திச் சென்ாகக் கூறப்படுகிறது.

இதனால் காரில் சென்ற ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம் போடிபேட்டையைச் சோ்ந்த முனிரத்தினம் (55) என்பவா், ஆட்டோ ஓட்டுநரிடம் தகராறில் ஈடுபட்டாா். இதையடுத்து, முனிரத்தினம், அவருடன் காரில் வந்த தங்கவேல் (41), வசந்தகுமாா் (30), இதேபோல், ஆட்டோ ஓட்டுநா் விஜய்க்கு ஆதரவாக திருத்தணி பகுதியைச் சோ்ந்த ராஜ் (34), ஆனந்தபாபு (31), பாா்த்திபன் (21) ஆகியோா் இடையே மோதல் ஏற்பட்டது.

இரு தரப்பினரும் ஒருவரை ஒருவா் கைகள் மற்றும் கல்லால் தாக்கிக் கொண்டனா்.

இது குறித்து இரு தரப்பினரும் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில், திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராஜ், ஆனந்தபாபு, பாா்த்திபன், முனிரத்தினம், தங்கவேல், வசந்தகுமாா் ஆகிய 6 பேரைக் கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com