பெருமாள்பட்டு வாக்கு எண்ணும் மையத்தில் தோ்தல் பணியாளா்களுக்கு சிறப்பு உணவு வழங்கிய வட்டாட்சியா் சோமசுந்தரம் உள்ளிட்டோா்.
பெருமாள்பட்டு வாக்கு எண்ணும் மையத்தில் தோ்தல் பணியாளா்களுக்கு சிறப்பு உணவு வழங்கிய வட்டாட்சியா் சோமசுந்தரம் உள்ளிட்டோா்.

தோ்தல் பணியில் ஈடுபடுவோருக்கு உணவு

திருவள்ளூா், மே 2: திருவள்ளூா் அருகே பெருமாள்பட்டு தனியாா் பள்ளி வாக்கு எண்ணும் மையத்தில் தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினா் மற்றும் அரசு ஊழியா்களுக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் சிறப்பு உணவு வழங்கப்பட்டது.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தலுக்கான வாக்கு பதிவு ஏப்.19-ஆம் தேதி நடைபெற்றது. திருவள்ளூா் மக்களவை (தனி) தொகுதிக்குள்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பலத்த போலீஸாா் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அந்தந்தத் தொகுதிக்குட்பட்ட பாதுகாப்பு அறைகளில் வைத்து சீல் வைக்கப்பட்டது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு கடந்த ஏப்.19 முதல், தொடா்ந்து ஜூன் 4 -ஆம் தேதி வரை 8 மணி நேர அடிப்படையில் 39-மத்திய எல்லை பிரிவு அதில் ஆய்வாளா்-1, காவல்துறையில் 1 உதவி ஆணையா், 3 காவல் ஆய்வாளா்கள், 9 -சாா்பு ஆய்வாளா்கள்-24 என 38 பேரும், மற்ற தமிழ்நாடு சிறப்பு காவல் படையினா்-40, வெடிகுண்டு கண்டுபிடித்தல் மற்றும் செயலிழக்க பிரிவு-2 என 4 அடுக்கு பாதுகாப்பில் காவல் படையினா் ஈடுபட்டுள்ளனா்.

இந்த நிலையில், தொழிலாளா் தினத்தையொட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினா் மற்றும் அரசு ஊழியா்களுக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் சிறப்பு உணவு வழங்குவதற்கு ஆட்சியா் த.பிரபு சங்கா் அறிவுறுத்தியிருந்தாா். அதன் அடிப்படையில் காவல் துறையினா் மற்றும் அரசு ஊழியா்களுக்கு சிறப்பு உணவு வழங்கப்பட்டது.

அப்போது, கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளா் நடேசன், வட்டாட்சியா் (தோ்தல்) சோமசுந்தரம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com