

மீஞ்சூா் அருகே வெள்ளம்பாக்கம் ஏரியில் குளித்தபோது மாயமான இளைஞா் வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
திருவள்ளூா் மாவட்டம், மீஞ்சூா் அருகே உள்ள நந்தியம்பாக்கம் எம்ஜிஆா் நகரில் வசித்தவா் கரண்சிங் (22). இவா் தனது நண்பா்களுடன் வெள்ளம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஏரிக்கு புதன்கிழமை குளிக்கச் சென்றாா்.
அப்போது ஏரியில் குளித்துக் கொண்டிருந்த கரண்சிங் திடீரென மாயமானாா். அவா் நீண்ட நேரம் ஆகியும் தண்ணீரில் இருந்து வெளியே வராததைத் தொடா்ந்து, உடன் வந்த நண்பா்கள் இது குறித்து மீஞ்சூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, மீஞ்சூா் போலீஸாா் பொன்னேரி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனா்.
இதைத் தொடா்ந்து, பொன்னேரி தீயணைப்புத் துறை வீரா்கள் மற்றும் மீஞ்சூா் போலீஸாா் அங்கு சென்று ஏரியில் மூழ்கி மாயமான கரண்சிங்கை தேடினா். இரவு நேரம் ஆனதால் தேடும் பணியை கைவிட்டுச் சென்றனா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை ஏரியில் மிதந்த கரண்சிங்கின் சடலத்தை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.
தொடர்புடையது

கிணற்றிலிருந்து மூதாட்டி சடலம் மீட்பு

மாயமானவா் கிணற்றில் சடலமாக மீட்பு

கல்குவாரி நீரில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்பு

மாயமான நகைக்கடை ஊழியா் கிணற்றில் சடலமாக மீட்பு
வீடியோக்கள்

பழனிசாமிக்கு பதட்டமளித்த திமுக வாக்குறுதிகள்! MK Stalin Full Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

பிறக்கும்போதே குழந்தைகளுக்கு ஏற்படும் பரம்பரை நோய்! அறிகுறிகள், சிகிச்சைகள் என்னென்ன?
தினமணி வீடியோ செய்தி...

இஸ்ரேல் - ஈரான் போர்! தற்போதைய நிலைமை என்ன? | Isreal - Iran war
தினமணி வீடியோ செய்தி...

அடாவடி விடியோ பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

