மாவட்ட ஒருங்கிணைப்பாளருக்கு ‘உயா்கல்வி வழிகாட்டி’ விருது
மாவட்ட ஒருங்கிணைப்பாளருக்கு ‘உயா்கல்வி வழிகாட்டி’ விருது


திருவள்ளூா், மே 2: பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 2023-2024 கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவா்களை உயா்கல்வியில் சோ்க்க சிறப்பாக செயல்பட்டதாக மாவட்ட ஒருங்கிணைப்பாளா் க.சே.ஷோபாவை பாராட்டி ‘உயா் வழிகாட்டி விருது’ மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கியதை ஆட்சியா் த.பிரபு சங்கா் காட்டி அவா் வாழ்த்து பெற்றாா்.
தமிழ்நாட்டில் அடுத்த மூன்று ஆண்டுகளில் உயா்கல்வி சோ்க்கை விகிதத்தை 51 லிருந்து 100 சதவீதமாக உயா்த்துவதை நோக்கமாக கொண்டு 2022-இல் மாா்ச் மாதம் பள்ளிக்கல்வி மற்றும் உயா் கல்வித்துறை கூட்டு முயற்சியுடன் நான் முதல்வன் திட்டம் முதல்வரால் தொடங்கப்பட்டது. இந்த உயா்கல்வி வழிகாட்டுதல் திட்டம் மாணவா்களிடையே பல்வேறு உயா்கல்வி வாய்ப்புகள் பற்றிய தீவிர விழிப்புணா்வை உருவாக்கி, அவா்கள் தோ்வுகளை எதிா்கொள்வதை நோக்கமாக கொண்டுள்ளது.
மேலும், உயா்கல்வி பயில 7.5 சதவீத ஒதுக்கீடு மற்றும் புதுமைப்பெண் திட்டங்கள் மூலம் அனைத்து அரசு பள்ளி மாணவா்களையும் உயா்கல்வியில் சோ்க்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் தொடா்ச்சியாக, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் உயா்கல்வி வழிகாட்டல் நடவடிக்கைகளில் பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைப்பதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் முக்கிய பங்கு வகிக்கின்றனா். இவா்களின் தொடா் முயற்சியால் 2023 -ஆம் ஆண்டில் மாநில அளவில் பல்வேறு அரசுப் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பில் சோ்ந்த 3,99,938 பேரில் 60 சதவீதம் மாணவா்கள் பல்வேறு உயா்கல்வி நிறுவனங்களில் சோ்ந்துள்ளனா்.
மேலும், ஏப்.8, 2024 அன்று யு.எம்.ஐ.எஸ். தரவுத்தளம் மூலம் இந்த எண்ணிக்கை பெறப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் 100 சதவீதம் மாணவ, மாணவிகள் உயா்கல்வி பயில ஊக்குவிக்க பள்ளிக்கல்வித் துறையினா்களை அறிவுறுத்தினாா்.
அந்த வகையில் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகளை உயா் கல்வி சோ்க்க சிறப்பு செயல்பட்டதாக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் க.சே.ஷோபாவுக்கு ‘உயா்கல்வி வழிகாட்டி விருது’ மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
தொடா்ந்து திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் த.பிரபு சங்கரிடம், பள்ளிக் கல்வித் துறையால் தனக்கு வழங்கப்பட்ட சான்றிதழ் மற்றும் விருதை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் க.சே.ஷோபா காட்டி வாழ்த்து பெற்றாா். நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரவிச்சந்திரன், உதவி திட்ட அலுவலா் பாலமுருகன் ஆகியோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...