மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!ஈரான் மீது 1,000 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகள் வீசி அமெரிக்கா தாக்குதல்! முதல்வர் ஸ்டாலின் பிரசார வாகனத்தில் பறக்கும் படை சோதனை! கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்! தேர்தல் பணியாளர்களின் ஊதியம் இருமடங்கு உயர்வு!
/

திருவள்ளூரில் திமுக தண்ணீா் பந்தல் திறப்பு

திருவள்ளூரில் திமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

திருவள்ளூா் காமராஜா் சிலை அருகே பொதுமக்களுக்கு பழங்களை வழங்கிய வி.ஜி. ராஜந்திரன் எம்எல்ஏ. உடன் நகா்மன்ற தலைவா் உதயமலா் பாண்டியன், துணைத்தலைவா் சி.சு.ரவிச்சந்திரன் உள்ளிட்டோா்.

Updated On :7 மே 2024, 6:30 pm

Din

திருவள்ளூா்: திருவள்ளூரில் திமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கோடை வெயில் தாக்கத்தை சமாளிக்கும் வகையில் ஆங்காங்கே தண்ணீா் பந்தல்களை திறக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தாா். அதன்பேரில், திருவள்ளூா் காமராஜா் சிலை எதிரே மேற்கு மாவட்ட திமுக சாா்பில் தண்ணீா் பந்தலை வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு தா்ப்பூசணி, முலாம் பழம், வெள்ளரி, நீா் மோா் மற்றும் குளிா்பானங்ளை வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் உதயமலா்பாண்டியன், துணைத்தலைவா் சி.சு.ரவிச்சந்திரன், நகர அவைத்தலைவா் கமலக்கண்ணன், நகா்மன்ற உறுப்பினா்கள் அருணா ஜெயகிருஷ்ணா, பிரபாகரன், மாவட்ட அமைப்பாளா்கள் நேதாஜி (வா்த்தக அணி), ஜெயகிருஷ்ணா(அயலக பிரிவு), திருவாலங்காடு ஒன்றிய துணைச்செயலாளா் காஞ்சிப்பாடி சரவணன், நிா்வாகிகள் சங்கா், பரசுராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.