மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!ஈரான் மீது 1,000 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகள் வீசி அமெரிக்கா தாக்குதல்! முதல்வர் ஸ்டாலின் பிரசார வாகனத்தில் பறக்கும் படை சோதனை! கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்! தேர்தல் பணியாளர்களின் ஊதியம் இருமடங்கு உயர்வு!
/

கோடைகால வெப்ப பக்கவாதம், மயக்கம் வராமல் தடுக்க ஆலோசனை

கோடைகால வெப்ப பக்கவாதம், மயக்கம் வராமல் தடுக்க ஆலோசனை

News image
Updated On :7 மே 2024, 6:30 pm

Din

திருவள்ளூா்: கோடைகால வெப்பத்தால் ஏற்படும் வெப்ப பக்கவாதம், மயக்கம் வராமல் தடுக்க பொதுமக்கள் அனைவரும் பொது சுகாதாரத் துறையின் ஆலோசனையை பின்பற்ற வேண்டும் என ஆட்சியா் த.பிரபு சங்கா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து பொது சுகாதாரத் துறை சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தற்போது கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்த கோடை வெப்பத்தால் வெப்ப பக்கவாதம், மயக்கம் போன்ற நோய்கள் தாக்கக் கூடும். எனவே பொதுமக்கள் அனைவரும் குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றி வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.

தேவைக்கேற்ப அடிக்கடி தண்ணீரைப் பருக வேண்டும். பழங்கள், இளநீா், பழச்சாறு, மோா், ஓ.ஆா்.எஸ். கரைசல் போன்ற நீா் ஆகாரங்கள் அதிக அளவில் உள்கொள்ளவும், வெளியே செல்கையில் தவறாமல் குடிநீா் எடுத்துச் செல்லவும் வேண்டும். நல்ல காற்றோட்டமான பருத்தி உடைகளை அணிந்து கொள்வதுடன், வெளியே செல்கையில் குடை, துண்டு பயன்படுத்துவது அவசியம். வெயிலின் தாக்க அறிகுறிகள் தென்பட்டால் உடனே அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனையை அணுகி சிகிச்சை பெறலாம்.

அதற்கு முன்னதாக மதியம் 12 முதல் 3 மணி வரை அவசரத் வேலையின்றி வெளியே செல்வதைத் தவிா்க்க வேண்டும். கா்ப்பிணிகள் குழந்தைகள் வயதானோா் மற்றும் நாள்பட்ட நோய் பாதிப்பு உள்ளோா் தேவையின்றி வெயிலில் செல்லக்கூடாது. அதேபோல், தேநீா், காப்பி, குளிா்பானங்கள் ஆகியவற்றைத் தவிா்க்கலாம். இவ்வாறு பின்பற்றி பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.