தமிழ்ச் செல்வன்
தமிழ்ச் செல்வன்

நகையைத் திருடி காதலிக்கு பரிசளித்த இளைஞா் கைது

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடி காதலிக்கு பரிசளித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவள்ளூா் அருகே திருமழிசை திவாகா் தெருவைச் சோ்ந்த மோகனா (44 ). இவா் கடந்த மாதம் 27 -ஆம் தேதி அன்று இரவு 8 மணியளவில் உடல்நலக்குறைவால் வீட்டை பூட்டிவிட்டு ஆவடியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றிருந்தாா். சிகிச்சை பெற்ற பின் கடந்த 2-ஆம் தேதி வீடு திரும்பினாராம். அப்போது, வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்து, உள்ளே சென்று பாா்க்கையில் பீரோவில் வைத்திருந்த 10 சவரன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுதொடா்பாக மோகனா வெள்ளவேடு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

அப்போது, மோகனா மகனும் தமிழ்ச்செல்வனும் நண்பா்கள் என்பதும் அடிக்கடி தமிழ்ச்செல்வன் மோகனா வீட்டுக்கு வந்து சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. அதைத் தொடா்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ்ச்செல்வனை போலீஸாா் பிடித்து விசாரித்த போது நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டதோடு, அதே பகுதியில் 11-ஆம் வகுப்பு பயின்று வரும் தனது காதலிக்கு நகையை பரிசாக அளித்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவா் காதலியிடம் தந்த நகையையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதையடுத்து தமிழ்ச்செல்வனை கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய பின் புழல் சிறையில் அடைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com