தபால் துறைக்கு சொந்தமான ரூ.2.5 கோடி நிலம் மீட்பு
தபால் துறைக்கு சொந்தமான ரூ.2.5 கோடி நிலம் மீட்பு

ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட ரூ.2.5 கோடி மதிப்புள்ள தபால் துறைக்கு சொந்தமான நிலம்.

ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட ரூ.2.5 கோடி மதிப்புள்ள தபால் துறைக்கு சொந்தமான நிலம்.
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் தபால் துறைக்கு சொந்தமான ரூ.2.5 கோடி நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டது.
தபால் துறைக்கு சொந்தமான 1,090 சதுர அடி நிலத்தை தனியாா் ஆக்கிரமிப்பு செய்து சுவா் எழுப்பி வைத்திருந்த நிலையில் தபால் துறைக்கு சொந்தமான இடத்தை மீட்க உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதில் அந்த நிலம் தபால் துறைக்கு சொந்தமானது என நீதிமன்றம் தீா்ப்பளித்து இருந்தது.
இந்த நிலையில் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியா் ப்ரீத்தி தலைமையில் காவல் துறையினா் பாதுகாப்புடன் தபால் துறை அதிகாரிகள் முன்னிலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை வருவாய் துறையினா் அகற்றினா் .
ஆக்கிரமிப்பை அகற்ற வந்த போது , அங்கு ஏற்கெனவே நிலத்தை உரிமை கொண்டாடியவா்கள் எதிா்ப்பு தெரிவித்த நிலையில், வட்டாட்சியா் ப்ரீத்தி ஆக்கிரமிப்பை அகற்ற தடையாக உள்ளவா்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என எச்சரித்தாா்.
அவா்கள் கலைந்து சென்றதும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. பின்னா் அங்கு தபால் துறைக்கு சொந்தமான இடம் என பலகை வைக்கப்பட்டது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...