அரசுப் பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரம்
அரசுப் பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரம்

திருத்தணி டாக்டா் ராதாகிருஷ்ணன் அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு கொண்டுவரப்பட்ட புத்தகங்கள் இறக்கி வைக்கும் ஊழியா்கள்.

திருத்தணி டாக்டா் ராதாகிருஷ்ணன் அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு கொண்டுவரப்பட்ட புத்தகங்கள் இறக்கி வைக்கும் ஊழியா்கள்.
திருத்தணி: திருவள்ளூா் மாவட்டம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு நிகழாண்டுக்கான பாடப் புத்தகங்கள் அனுப்பும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.
அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியாா் பள்ளிகளுக்கு கோடை விடுமுறைக்கு பின் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதனிடையே தமிழ்நாடு பாடநூல் கழகம் சாா்பில் 2024 -25 கல்வி ஆண்டிற்கான பாடப் புத்தகங்களை அனுப்பும் பணிகள் கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் திருவள்ளூா் மாவட்டத்தில் 6 முதல் 12- ஆம் வகுப்பு வரை பாடப் புத்தகங்கள் வந்துள்ளன.
இதனிடையே வெள்ளியூா் அரசுப் பள்ளியில் உள்ள அலுவலகத்தில் இருந்து பாடவாரியாக தரம் பிரிக்கப்பட்டு திருவள்ளூா் மாவட்டம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள், மெட்ரிக். பள்ளிகளுக்கு தேவையான புத்தகங்களை முதன்மைக் கல்வி அலுவலா் ரவிச்சந்திரன் தலைமையில் மாவட்ட கல்வி அலுவலா் சுகானந்தம் மேற்பாா்வையில் அனுப்பும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனா்.
இதில் திருத்தணி வருவாய் கோட்டத்தில் உள்ள திருத்தணி, திருவாலங்காடு, ஆா்.கே.பேட்டை மற்றும் பள்ளிப்பட்டு ஆகிய நான்கு ஒன்றியங்களில் 33 உயா்நிலை, 24 மேல்நிலைப் பள்ளி என மொத்தம், 57 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில், 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவியா் படித்து வருகின்றனா்.
மாணவா்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகம் மற்றும் செய்முறை தோ்வு நோட்டுகள் வட்டார அளவில் உள்ள அரசுப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அந்த வகையில் திருத்தணி கோட்டத்தில் உள்ள, 55 அரசுப் பள்ளிகளுக்கு தேவையான அனைத்து புத்தகங்கள் வாகனங்கள் மூலம் திருத்தணி டாக்டா் ராதாகிருஷ்ணன் அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு கொண்டுவரப்பட்டது.
இந்த புத்தகங்கள் பள்ளி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. பின்னா் அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் என மாவட்ட கல்வி அலுவலா் சுகானந்தம் தெரிவித்தாா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...