
திருத்தணி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த செளமியாஅன்புமணி.

திருத்தணி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த செளமியாஅன்புமணி.
திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் மனைவி சௌமியா செவ்வாய்க்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
தருமபுரி மக்களவை தொகுதியில் பா.ம.க. சாா்பில் சௌமியா அன்புமணி போட்டியிட்டாா். கடந்த ஏப். 19-இல் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் செவ்வாய்க்கிழமை செளமியாஅன்புமணி மற்றும் திருவள்ளூா் மேற்கு மாவட்ட செயலாளா் தினேஷ் குமாா் ஆகிய இருவரும் திருத்தணி முருகன் மலைக்கோயிலுக்கு வந்தனா்.
பின்னா், ஆபத்சகாய விநாயகா், சண்முகா், மூலவா், வள்ளி, தெய்வானை மற்றும் உற்சவா் முருகா் ஆகிய சந்நிதிகளில் சிறப்புப் பூஜைகள் நடத்தி செளமியாஅன்புமணி வழிபட்டாா். வரும் ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது தருமபுரி தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும் என வேண்டிக் கொண்டதாக கட்சியினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...