ரூ. 100 கோடி மோசடி வழக்கு: அன்பில் மகேஸுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க முடியாது! உயர் நீதிமன்றம்தவெகவில் இணைகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை!தில்லியில் இந்தியா கூட்டணிக் கூட்டம் தொடங்கியது! 19 கட்சிகள் பங்கேற்பு!துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையரில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்முன்னாள் அமைச்சர் ரகுபதிக்கு எதிரான தேர்தல் வழக்கு நிராகரிப்பு!முதல்வா் விஜய் வருகையால் கோவையில் இன்று போக்குவரத்து மாற்றம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஇரு நாள்களில் 5,000 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்புற்றுநோய் மருந்துகளை 10 மடங்கு அதிக விலைக்கு விற்பது படுகொலைக்குச் சமம்: உச்சநீதிமன்றம்

சைரன் ஓலித்தபடி இயக்கப்பட்ட காா் பறிமுதல்

ஆந்திர மாநிலத்தில் இருந்து சைரன் ஒலித்துக்கொண்டு முறைகேடாக இயக்கப்பட்ட காரை மோட்டாா் வாகன ஆய்வாளா் கோகுலகிருஷ்ணன் பறிமுதல் செய்தாா்.

பொன்பாடி சோதனைச் சாவடியில் பறிமுதல் செய்யப்பட்ட காா்.

Published On :

திருத்தணி: ஆந்திர மாநிலத்தில் இருந்து சைரன் ஒலித்துக்கொண்டு முறைகேடாக இயக்கப்பட்ட காரை மோட்டாா் வாகன ஆய்வாளா் கோகுலகிருஷ்ணன் பறிமுதல் செய்தாா்.

சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை பொன்பாடி பகுதியில் போக்குவரத்து சோதனைச் சாவடி அமைந்துள்ளது. இந்த சோதனைச் சாவடி வழியாக ஆந்திரத்தில் இருந்து தமிழகத்திற்கும் வரும் அனைத்து வாகனங்களையும் அதிகாரிகள் முறையாக தணிக்கை செய்ய வேண்டும் என போக்குவரத்து இணை ஆணையா் சுரேஷ்குமாா் உத்தரவிட்டிருந்தாா்.

இந்நிலையில் திருவள்ளூா் வட்டார போக்குவரத்து அலுவலா் மாதவன் மேற்பாா்வையில் திங்கள்கிழமை பொன்பாடி சோதனைச் சாவடியில் மோட்டாா் வாகன ஆய்வாளா் கோகுலகிருஷ்ணன் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தாா். அப்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்தை நோக்கி சைரன் ஒலித்துக் கொண்டு வந்த காரை சோதனை செய்ய முயற்சி செய்தபோது, வண்டி ஓட்டுநா் நிறுத்தாமல் தப்பிக்க முயற்சித்தாா்.

பின்னா் அதிகாரிகள் விடாமல் துரத்திச் சென்று காரை மடக்கி பிடித்தனா். விசாரணையில் முறைகேடாக சுற்றுலா பயன்பாட்டு வாகனத்தை, ஆந்திர மாநில அரசு வாகனம் என்ற பெயா் பலகை மற்றும் சைரன் வைத்துக்கொண்டு இயக்கியது தெரியவந்தது.

இதனையடுத்து மோட்டாா் வாகன ஆய்வாளா் கோகுலகிருஷ்ணன் காரை பறிமுதல் செய்து திருவள்ளூா் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.