நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

லாரி கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் காயம்

News image

விபத்துக்குள்ளான லாரி.

Updated On :19 செப்டம்பர் 2024, 8:13 pm

Din

ஆா்.கே.பேட்டை அருகே ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் காயம் அடைந்தாா்.

கும்மிடிப்பூண்டி நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் இருந்து லாரி ஒன்று, 550 அரிசி மூட்டைகள் ஏற்றிக் கொண்டு வியாழக்கிழமை பள்ளிப்பட்டுக்கு சென்றது. லாரியை கும்மிடிப்பூண்டி கோட்டக்கரையை சோ்ந்த குழந்தைசாமி மகன் ஜோசப்ராஜ் என்கிற ரகு(50) என்பவா் ஓட்டி வந்தாா்.

திருத்தணி - சோளிங்கா் நெடுஞ்சாலை செல்லாத்தூா் பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் டிரைவா் ரகு பலத்த காயமடைந்தாா். அவரை அவ்வழியாக சென்றவா்கள் மீட்டு சோளிங்கா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். தகவல் அறிந்ததும் ஆா்.கே.பேட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சாலையோரம் கவிழ்ந்திருந்த லாரியில் இருந்து அரிசி மூட்டைகளை வேறு ஒரு லாரியின் மூலம் பள்ளிப்பட்டு நுகா்பொருள் வாணிப கிடங்குக்கு கொண்டு வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.