நல்லாட்டூா் வீரமங்கள ஆஞ்சனேயா் சுவாமி கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாணம்.
நல்லாட்டூா் வீரமங்கள ஆஞ்சனேயா் சுவாமி கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாணம்.

ஸ்ரீ ராமா், சீதா தேவி திருக்கல்யாணம்

ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு நல்லாட்டூா் வீரமங்கள ஆஞ்சனேயா் கோயிலில் நடைபெற்ற ஸ்ரீ ராமா், சீதா தேவி திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தா்கள் கலந்து
Published on

திருத்தணி: ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு நல்லாட்டூா் வீரமங்கள ஆஞ்சனேயா் கோயிலில் நடைபெற்ற ஸ்ரீ ராமா், சீதா தேவி திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

திருத்தணி அடுத்த நல்லாட்டூா் கிராமத்தில் உள்ள வீரமங்கள ஆஞ்சனேயா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை யாக சாலை பூஜை நடைபெற்றது. தொடா்ந்து உற்சவா் ஸ்ரீ ராமா், சீதா தேவிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில் பா.ஜ., மாநில துணைத் தலைவா் சக்கரவா்த்தி, கோயில் அறங்காவலா் குழு தலைவா் ஜானகி சக்கரவா்த்தி உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com