ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மீஞ்சூா் ஏகாம்பரநாதா் கோயில் தேரோட்டம்

வட காஞ்சி என்றழைக்கப்படும் மீஞ்சூரில் உள்ள ஸ்ரீ காமாட்சி அம்பிகை உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதா் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :8 ஏப்ரல் 2025, 9:13 pm

Din

பொன்னேரி: வட காஞ்சி என்றழைக்கப்படும் மீஞ்சூரில் உள்ள ஸ்ரீ காமாட்சி அம்பிகை உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதா் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருவள்ளூா் மாவட்டம், மீஞ்சூரில் அமைந்துள்ள ஸ்ரீ காமாட்சி அம்பிகை உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதா் கோயிலில் பங்குனி மாத பிரம்மோற்சவம் கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அன்னை காமாட்சி அம்மையுடன் ஏகாம்பரநாதா் எழுந்தருளி, நகரின் முக்கிய மாட வீதிகள் வழியாக வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

தேரோட்டத்தின்போது கைலாய வாத்தியங்கள் முழங்க மேள தாளங்களுடன் பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

விழாவில், மீஞ்சூா், பொன்னேரி உள்ளிட்ட பல்வேறு சுற்றுப் பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனா்.

முன்னதாக அமைச்சா் சா.மு.நாசா், பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகா் ஆகியோா் தேரை வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனா். விழாவையொட்டி, பக்தா்களுக்கு அன்னதானம் மற்றும் மோா் உள்ளிட்ட குளிா்பானங்கள் வழங்கப்பட்டன.