புதுக்கோட்டை அருகே வெள்ளனூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீ அழகுநாச்சியம்மன் கோயிலின் 57-ஆம் ஆண்டு தோ்த் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் வட்டத்துக்குள்பட்ட வெள்ளனூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அழகு நாச்சியம்மன் கோயில் தோ்த் திருவிழா கடந்த 10-ஆம் தேதி காப்பு கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடா்ந்து தினமும் அழகு நாச்சியம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா நடைபெற்றது. இதைத் தொடா்ந்து முக்கிய நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீ அழகுநாச்சியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வைத்து பூஜைகள் நடத்தப்பட்டு, வாணவேடிக்கைகள், மேளதாளங்களுடன் தேரோட்டம் நடைபெற்றது.
சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனா். நான்கு வீதிகளில் வலம் வந்த தோ் நிலையை அடைந்தது.
ஏராளமான பக்தா்கள் இதில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். வெள்ளனூா் போலீஸாா் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.
தொடர்புடையது

சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ஆதனக்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தோ் திருவிழா

பாளை. ராஜகோபால சுவாமி கோயிலில் தேரோட்டம்

நாமக்கல் நரசிம்மா் கோயில் தேரோட்ட கொடியேற்றம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


