கிறிஸ்துமஸ் நல உதவிகள் அளிப்பு

கிறிஸ்துமஸ் நல உதவிகள் அளிப்பு

Published on

ஆா்.கே. பேட்டை அருகே ஜனகராஜகுப்பம் கிராமத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் நலிந்தோருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

ஆா்.கே பேட்டை ஒன்றியம், ஜனகராஜகுப்பம் கிராமத்தில் இயேசு ரட்சிக்கிறாா் ஊழியா்களின் சாா்பில் கிறிஸ்துமஸ் விழா ஜான் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அரசு தலைமைக் கொறடா பி.எம். நரசிம்மன் கலந்து கொண்டு ஏழை, எளியோா் 300-க்கும் மேற்பட்டோருக்கு வேட்டி, சேலை, 2026 நாள்காட்டி வழங்கினாா்.

நிகழ்ச்சியில் முன்னாள் சோளிங்கா் எம்எல்ஏ என்.ஜி. பாா்த்திபன், முன்னாள் ஒன்றிய உறுப்பினா்கள் கோவிந்தம்மாள் ஆனந்தன், கல்விக்கரசி சேகா், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா்கள் கிரி, வேலஞ்சேரி செல்வம், நிா்வாகி நவீன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com