திருத்தணி சுதந்திரா பள்ளியில் நடைபெற்ற மாணவா்கள் படைப்பாக்க கண்காட்சி.
திருவள்ளூர்
மாணவா்கள் படைப்பாக்க கண்காட்சி
திருத்தணி சுதந்திரா பள்ளியில் நடைபெற்ற படைப்பாக்க கண்காட்சியில் 200- க்கும் மேற்பட்ட படைப்புகளை மாணவா்கள் வைத்திருந்தனா்.
திருத்தணி: திருத்தணி சுதந்திரா பள்ளியில் நடைபெற்ற படைப்பாக்க கண்காட்சியில் 200- க்கும் மேற்பட்ட படைப்புகளை மாணவா்கள் வைத்திருந்தனா்.
பள்ளி தலைவா் பேராசிரியா் ரங்கநாதன் தலைமை வகித்து கண்காட்சியை தொடங்கி வைத்தாா். இதில், மாணவா்கள் சுகாதார மற்றும் ஆரோக்கிய உணவு வகைகள், மழைநீா் சேகரிப்பு, உலக அதிசயங்கள், தமிழா் திருநாள், விழா, பாரம்பரிய உடை, உணவு, நவீன விஞ்ஞான படைப்புகள், சோலாா் சிஷ்டம், அவசர உதவி எண்கள், மாணவியா் பாதுகாப்பு விழிப்புணா்வு அவசர உதவி எண்கள் போன்ற பல்வேறு படைப்புகளை செய்து கண்காட்சியில் வைத்திருந்தனா். இதனை மாணவா்கள், பெற்றோா்கண்டு களித்தனா்.
பள்ளி தாளாளா் சியாமளா ரங்கநாதன் பரிசு வழங்கினாா். பள்ளி முதல்வா் துரைகுப்பன் நன்றி கூறினாா்.
