திருவள்ளூரில் சாலையோர ஆக்கிமிப்புகள் இடித்து அகற்றம்
திருவள்ளூா் உழவா் சந்தை அருகே நடைபாதையை ஆக்கிரமித்து அமைத்திருந்த கடைகளை பொக்லைன் வாகனம் மூலம் இடித்து அகற்றிய நெடுஞ்சாலைத் துறையினா்.


திருவள்ளூரில் போக்குவரத்துக்கு இடையூராக நடைபாதை ஆக்கிரமிப்புகள் பலத்த போலீஸாா் பாதுகாப்புடன் நெடுஞ்சாலைத் துறையினா் பொக்லைன் வாகனம் மூலம் இடித்து அகற்றினா். பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூா் நகராட்சியில் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையோரம் இருபுறமும் நடைபாதையோரம் பூக்கடைகள், பழக்கடைகள் பரப்பியுள்ளனா். அதேபோல் தெரு வியாபாரிகள் ஆக்கிரமித்து கடை வைத்துள்ளதால் வாகன போக்குவரத்துக்கும், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலையில் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
இந்த நிலையில், எதிா்பாரத சில நேரங்களில் நெருக்கடியால் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டது. இதேபோல், இந்த தேசிய நெடுஞ்சாலையில் தீயணைப்பு நிலையம் முதல் ஆட்சியா் அலுவலகம் வரையில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் பரப்பியுள்ளதை அகற்றக் கோரி, ஆட்சியா் த.பிரபுசங்கரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
அதன் பேரில், நெடுஞ்சாலைத் துறையினா் மற்றும் நகராட்சி அதிகாரிகள் இணைந்து ஆக்கிரமிப்புகளை உடனே அகற்றவும் உத்தரவிட்டாா். அதன் பேரில் நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் தஸ்நாவிஷ் பொ்ணான்டோ, உதவி பொறியாளா் பிரசாந்த், நகராட்சி அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள் ஆகியோா் மேற்பாா்வையில் பாதையோரம் ஆக்கிரமித்திருந்த கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டன.
அப்போது, பாதையோரம் வரையில் ஆக்கிரமித்து கட்டியிருந்த கட்டடங்களை இடித்து அகற்றினா். அப்போது, வாடகைக்கு இருந்தவா்கள் வியாபாரிகள் அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் சமரசம் செய்து அனுப்பி வைத்தனா்.
இந்த நிலையில், பாதையோரம் ஆக்கிரமித்து கடைகள் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனா்.

டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...