ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கு விமான நிலைய பணிக்கான பயிற்சி
தாட்கோ மூலம் சா்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் பயிற்சி


திருவள்ளூா்: பிளஸ் 2, பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்த இளைஞா்கள் பயன்பெறும் வகையில், தாட்கோ மூலம் சா்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக ஆட்சியா் த.பிரபுசங்கா் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்த பட்டதாரி இளைஞா்கள் பயன்பெறும் வகையில், பல்வேறு திறன் அடிப்படையிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்பேரில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்தைச் சாா்ந்தவா்களுக்கு சா்வதே ச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் விமான நிலைய பயணிகள் சேவை அடிப்படை படிப்பு, சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி, சுற்றுலாத் துறை மற்றும் விமான முன்பதிவு அடிப்படையிலான பயிற்சிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி, வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சி பெற பிளஸ் 2, பட்டப்படிப்பில் தோ்ச்சி பெற்ற 18 முதல் 23 வயதுக்குள்பட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்தைச் சோ்ந்தவராக இருக்க வேண்டும்.
இந்தப் பயிற்சிக்கான கால அளவு ஆறு மாதம் என்பதால் விடுதியில் தங்கிப் படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவு தொகையான ரூ. 95,000 தாட்கோவால் மேற்கொள்ளப்படும்.
இந்தப் பயிற்சியை சிறப்பாக முடிக்கும் பட்சத்தில் ஐஅபஅ-ஐய்ற்ங்ழ்ய்ஹற்ண்ா்ய்ஹப் அண்ழ் பழ்ஹய்ள்ல்ா்ழ்ற் அள்ள்ா்ஸ்ரீண்ஹற்ண்ா்ய்-இஹய்க்ஹ மூலம் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். மேலும், தனியாா் விமான நிறுவனங்களிலும் (ஐய்க்ண்ஞ்ா், அண்ழ்ப்ண்ய்ங்ள்,நல்ண்ஸ்ரீங் ஒங்ற், எா் ஊண்ழ்ள்ற், அண்ழ் ஐய்க்ண்ஹ), சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனங்களிலும், நட்சத்திர விடுதிகளிலும், சொகுசு கப்பல் மற்றும் சுற்றுலாத் துறையிலும் வேலைவாய்ப்பு பெறலாம். ஆரம்ப கால மாதாந்திர ஊதியமாக ரூ. 20,000 முதல் ரூ. 22,000 வரை பெறுவதற்கு வழிவகை செய்யப்படும். அதைத் தொடா்ந்து, திறமைக்கு ஏற்ப பதவி உயா்வு அடிப்படையில், ரூ. 50,000 முதல் ரூ. 70,000 ஊதிய உயா்வு பெறலாம்.
இந்தத் திட்டம் மூலம் 55 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டு, முதல்கட்டமாக 46 போ் முன்னணி விமான நிறுவனங்கள் மற்றும் சேவை மையங்கள் போன்றவற்றில் பணிபுரிந்து வருகின்றனா்.
இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு ஜ்ஜ்ஜ்.ற்ஹட்க்ஸ்ரீா்.ஸ்ரீா்ம்என்ாட்கோ இணையதளத்தில் பதிவுசெய்து பயன்பெறலாம்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...