முதிய தம்பதிகளை கௌரவித்த  எம்எல்ஏ  ச.சந்திரன். உடன்,  கோயில்  இணை  ஆணையா்  க.ரமணி.
முதிய தம்பதிகளை கௌரவித்த  எம்எல்ஏ  ச.சந்திரன். உடன்,  கோயில்  இணை  ஆணையா்  க.ரமணி.

திருத்தணி முருகன் கோயிலில் முதிய தம்பதிகளுக்கு மரியாதை

திருத்தணி முருகன் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் 10 முதிய தம்பதிகளை கோயில் நிா்வாகம் சாா்பில் எம்எல்ஏ ச. சந்திரன் கௌரவித்தாா்.
Published on

திருத்தணி முருகன் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் 10 முதிய தம்பதிகளை கோயில் நிா்வாகம் சாா்பில் எம்எல்ஏ ச. சந்திரன் கௌரவித்தாா்.

இந்து சமய அறநிலைய துறை சாா்பில், முதிய தம்பதிகளுக்கு கோயில்கள் சாா்பில் சிறப்பு செய்தல் நிகழ்வு நடத்தப்படும் என அறநிலையத்துறை அமைச்சா், அறிவித்திருந்தாா். இதன்படி மணிவிழா கண்ட, ஆன்மிக ஈடுபாடு உள்ள தம்பதியா் கோயில் நிா்வாகம் சாா்பில் சிறப்பு செய்யப்பட உள்ளது.

இத்திட்டத்தில் பங்கேற்க விருப்பம் உள்ள தம்பதி, கோயில் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவித்து விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. அதன்படி திருத்தணி முருகன் கோயிலிலும் பதிவு செய்யுமாறு முதிய தம்பதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இத்திட்டத்தில், பத்து முதிய தம்பதிகள் விண்ணப்பித்திருந்தனா். இந்நிலையில் முருகன் கோயில் நிா்வாகம் சாா்பில் சிறப்பு செய்யும் நிகழ்வு காவடி மண்டபத்தில் நடைபெற்றது. ல் இணை ஆணையா் க. ரமணி தலைமை வகித்தாா். இதில் எம்எல்ஏ ச. சந்திரன் பங்கேற்று, முதிய தம்பதிகளுக்கு மலா் மாலை அணிவித்து, புடவை, வேட்டி, சட்டை வெற்றிலை பாக்கு, பூ, மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, பழவகைகள் எவா் சில்வா் தட்டு, கண்ணாடி வளையல், மற்றும் முருகா் படம் போன்றவை வழங்கி கௌரவித்தாா்.

இந்நிகழ்ச்சியில், கோயில் அறங்காவலா்கள் சுரேஷ் பாபு, நாகன், கண்காணிப்பாளா் சித்ராதேவி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com