திருவள்ளூா்: திருவள்ளூரில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 383 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்களிடம் இருந்து நிலம் சம்பந்தமாக-39, சமூக பாதுகாப்புதிட்டம்-22, வேலைவாய்ப்பு வேண்டி-28, பசுமைவீடு, அடிப்படை வசதிகள் வேண்டி-19 மற்றும் இதர துறைகள் 275 என மொத்தம் 383 மனுக்கள் பெறப்பட்டன.
தொடா்ந்து மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க அலுவலா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சு.சுரேஷ், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வெங்கட்ராமன், தனித்துணை ஆட்சியா் (ச.பா.தி) பாலமுருகன், உதவி ஆணையா் கலால் கணேசன், வழங்கல் அலுவலா் வெங்கடேசன், திருத்தணி கோட்டாட்சியா் கனிமொழி, பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் உஷாராணி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தொடர்புடையது
9 தொகுதிகளில் 191 வேட்பு மனுக்கள் ஏற்பு

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 312 மனுக்கள்

திருவள்ளூா்: குறைதீா் கூட்டத்தில் 500 மனுக்கள்

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 417 மனுக்கள்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


