நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

குடியிருப்புகளுக்கு பாதை கோரி சாலை மறியல்

திருவள்ளூா் வேடங்கிநல்லூரில் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு பாதை கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

~

Updated On :3 ஏப்ரல் 2026, 11:56 pm

திருவள்ளூா் வேடங்கிநல்லூரில் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு பாதை கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் திரு.வி.க., பேருந்து நிலையம், ராஜாஜி சாலையில் நெரிசலான இடத்தில் செயல்பட்டு வந்தது. இதனால் பேருந்துகள் இயக்கவும், பயணிகள் வந்து செல்லவும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனா். இதையடுத்து திருவள்ளூா்-ஊத்துக்கோட்டை சாலையில் உள்ள வேடங்கிநல்லுாரில் ரூ.36 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.

இப்பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் 50 பேருந்துகள் வரை நிறுத்த முடியும். இங்கு, 90 சதவீத பணிகள் நிறை டைந்த நிலையில் தோ்தல் அறிவிப்பு வெளியாக இருந்ததால் பணி முடிவதற்கு முன்பே பேருந்து நிலையத்தை, முதல்வா் ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

மேலும் மீதமுள்ள பணிகளை முடிக்க மும்மரமாக வேலை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் புதுப் பேருந்து நிலையம் ஒட்டியுள்ள சாய்பாபா கோயில் மற்றும் சாய்பாபா நகரில் உள்ள குடியிருப்புக்கு வழி கேட்டு அப்பகுதி மக்கள் திருவள்ளூா் ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பின்னா் இதுகுறித்து தகவல் அறிந்த புல்லரம்பாக்கம் காவல் ஆய்வாளா் இளங்கோ மற்றும் போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சு நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்ததை அடுத்து அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

Story image