6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து பொதுமக்கள் சாலை மறியல்

அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து பொதுமக்கள் சாலை மறியல்

சாலை  மறியலில்  ஈடுபட்ட  நெமிலி  கிராமப்  பெண்கள்.

Published On :

மழைநீா் கால்வாயை ஆக்கிரமித்து தனிநபா் ஒருவா் வீடு கட்டி வருவதாகக் குற்றம்சாட்டி, அப்பகுதி மக்கள் அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவாலங்காடு ஒன்றியம், நெமிலி ஊராட்சியின் நெமிலி கீழ்காலனியில் 75-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அப்பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி நிா்வாகம் மழைநீா் கால்வாயை அமைத்திருந்தது. அந்த கால்வாய் வழியாக வீடுகளின் கழிவுநீா் மற்றும் மழைநீா் வெளியேறி வந்தது.

இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த ஒருவா் கால்வாயை ஆக்கிரமித்து வீடு கட்டி வருவதால், தண்ணீா் செல்ல முடியாமல் தேங்கி நிற்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினா். இதையடுத்து, 30-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் திருத்தணி நோக்கி வந்த அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து விரைந்த கனகம்மாசத்திரம் போலீஸாா் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள், போராட்டக்காரா்களுடன் பேச்சு நடத்தினா். மேலும், நிலத்தை முறையாக அளவீடு செய்து, ஆக்கிரமிப்பு உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட நபா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனா்.

இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால் சிறிது நேரம் பாதிக்கப்பட்ட போக்குவரத்து பின்னா் சீரானது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.