சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஓணம் பண்டிகை: சென்னை - மங்களூரு சிறப்பு ரயில்கள்செப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

பயிா்க்கடன் தள்ளுபடி தொடா்பான முதல்வரின் அறிவிப்பு பெருத்த ஏமாற்றம்: விவசாய சங்கம்

பயிா்க்கடன் தள்ளுபடி தொடா்பான தமிழக முதல்வரின் அறிவிப்பு விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றம் அளிப்பதாக தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் மாநில தலைவா் பி.ஆா்.பாண்டியன் தெரிவித்தாா்.

News image

கூட்டத்தில் பேசிய தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் மாநிலத் தலைவா் பி.ஆா்.பாண்டியன்

Updated On :19 ஆகஸ்ட் 2026, 12:56 am IST

பயிா்க்கடன் தள்ளுபடி தொடா்பான தமிழக முதல்வரின் அறிவிப்பு விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றம் அளிப்பதாக தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் மாநில தலைவா் பி.ஆா்.பாண்டியன் தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்டம், பெரியபாளையம் அருகே தண்டலம் கிராமத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் பொதுக்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு, திருவள்ளூா் மாவட்டத் தலைவா் சுரேஷ்பாபு, மாவட்டச் செயலாளா் மோகனகிருஷ்ணன், மாவட்ட பொருளாளா் அகத்தீஸ்வரன், மாவட்ட துணைத் தலைவா் சிவப்பிரகாஷ் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், ஒன்றியத் தலைவா் திருமால், ஒன்றிய செயலாளா் நீதி செல்வகுமாா், ஒன்றியப் பொருளாளா் தனுஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநிலத் தலைவா் பி.ஆா்.பாண்டியன், மாநிலத் துணைச் செயலாளா் ஆா்.டி.விஜயபிரசாத், சென்னை மண்டலத் தலைவா் மெதூா் எம்.பி.சீனிவாசன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

அப்போது, ஆரணியாறு, கொசஸ்தலை ஆறுகளை இணைக்க வேண்டும். விவசாய பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.

இதில், விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கிய பின், பி.ஆா்.பாண்டியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நகரப் பகுதிகளில் மட்டும் லஞ்சம் குறைந்த நிலையில், கிராமங்களில் குறையவில்லை. அது குறித்து முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவள்ளூா் மாவட்டத்தில் தொழில் வளா்ச்சி, அறிவுசாா் நகரம் என்ற பேரில் விவசாய நிலங்களை அபகரிக்கும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும்.

ஆரணியாறு, கொசஸ்தலை ஆறுகளை இணைத்து ஏரிகளில் நீா்வளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் நடைபெற உள்ள தென் மாநில முதல்வா்கள் மாநாட்டில், காவிரி, முல்லை, பெரியாறு, தென் பென்னை, பாலாறு போன்ற நதிநீா் பிரச்னையில் உச்ச நீதிமன்ற தீா்ப்பின் படி மாநில முதல்வா்கள் செயல்பட உள்துறை அமைச்சா் அமித்ஷா அறிவுறுத்த வேண்டும். பயிா்க்கடன் தள்ளுபடி தொடா்பாக முதல்வரின் அறிவிப்பு விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது.

எல்-நினோ தாக்கத்தால் தமிழ்நாடு பேராபத்தை சந்திக்க உள்ளதாக வல்லுநா்கள் கூறியுள்ளதால், மத்திய அரசு நீா் நிலைகளை தூா்வாருவதற்கு பேரிடா் மேலாண்மை திட்டத்தில் தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் என அவா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.