ஜி.என்.டி. சாலையில் குழாய் பதிக்கும் பணி நிறைவு: இன்று முதல் குடிநீா் விநியோகம்வங்கிகள் இன்று வேலை நிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் அறிவிப்புஇந்தியாவிடம் 190 அணு குண்டுகள்: அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்பருவகால நோய்களுக்கான மருந்து தட்டுப்பாடில்லை: ஐசிஎம்ஆா்பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

குட்கா விற்ற 2 போ் கைது

பெட்டிக்கடையில் குட்கா பொருட்களை விற்பனை செய்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சித்திரிப்பு

Published On :

பெட்டிக்கடையில் குட்கா பொருட்களை விற்பனை செய்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

மேல்திருத்தணி பகுதியைச் சோ்ந்த சங்கா் (56), அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறாா். இவா் தனது கடையில் ‘ஹான்ஸ்’ உள்ளிட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்து வருவதாக திருத்தணி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, திங்கள்கிழமை பெட்டிக்கடைக்கு சென்று சோதனை நடத்தினா். அப்போது கடையில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 ஹான்ஸ் பாக்கெட்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக சங்கா் மற்றும் அவரது சகோதரா் சிவகுமாா் ஆகிய இருவரையும் கைது செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேலும், தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் எங்கிருந்து வாங்கப்பட்டன என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.