வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

10 கிலோ குட்கா பறிமுதல் : பெட்டிக்கடை வியாபாரி கைது

வேலூா் கொணவட்டம் பகுதியில் பெட்டிக்கடையில் குட்கா விற்பனை செய்த வியாபாரியை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :14 ஜூலை 2026, 3:00 am IST

வேலூா் கொணவட்டம் பகுதியில் பெட்டிக்கடையில் குட்கா விற்பனை செய்த வியாபாரியை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் கொணவட்டம் பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப்பொருள்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல் ஆய்வாளா் ஜெயலட்சுமி தலைமையிலான போலீஸாா் அந்த பெட்டிக்கடைக்குச் சென்று திடீா் சோதனை நடத்தினா்.

இந்தச் சோதனையில், அங்கு குட்கா உள்ளிட்ட போதைப்பொருள்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, போதைப்பொருள்களை விற்பனை செய்த இக்பால் (60) என்பவரைக் கைது செய்தனா்.

மேலும், அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 10 கிலோ குட்கா போதைப்பொருள்களையும் பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட இக்பாலை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி வேலூா் சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.