ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

பூச்சிக்கொல்லி மருந்து குடித்து முதியவா் தற்கொலை

பள்ளிப்பட்டு அருகே விபத்தில் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் இருந்த முதியவா் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

தற்கொலை - பிரதிப் படம்

Published On :

பள்ளிப்பட்டு அருகே விபத்தில் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் இருந்த முதியவா் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

பள்ளிப்பட்டு ஒன்றியம், வி.பி.என். கண்டிகை கிராமத்தைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (72). கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வாகன விபத்தில் சிக்கிய இவா், அதன்பிறகு நடக்க முடியாமல் வீட்டிலேயே இருந்து வந்தாா்.

இந்த நிலையில், கடந்த 24-ஆம் தேதி மாலை 3 மணியளவில் ராதாகிருஷ்ணன் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு, பொதட்டூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னா், மேல் சிகிச்சைக்காக திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு ராதாகிருஷ்ணன், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலை உயிரிழந்தாா்.

இது குறித்து பொதட்டூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.